சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றி, பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து மிரட்டிய போலி இயக்குனர்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பல பெண்களை சீரழித்து, உல்லாசம் அனுபவித்த வீடியோவை வைத்து மிரட்டி, பல லட்சம் பணம் பறித்த காம வெறிபிடித்த போலி இயக்குனரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் டேவிட் துரைராஜ், இவரது மகன் இமானுவேல் ராஜா, வயது 43. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சினிமா எடுப்பதாக கூறி ராமேஸ்வரம் வந்து, 5-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் அறைகள் முன் பதிவு செய்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

பின்னர் சினிமா படம் எடுகப்பதற்கு இடம் தேர்வு செய்ய போவதாக பாம்பனை சேர்ந்த நபர் ஒருவருடன் தனுஸ்கோடிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருந்த காத்திக் ராஜா என்பவரை சந்தித்து, தான் திரைப்பட இயக்குநர் சக்தி என்றும், தான் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகவும் அதில் பூசாரி வேடத்திற்கு ஆள் தேவை என்றும் அதற்கு சம்பளமாக 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளர்.

இந்த ஆசை வார்த்தையை நம்பிய கார்த்திக் ராஜா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்னும் மோக வலையில் சிக்கியுள்ளார். பின்னர் தன்னுடன் தன் மனைவியையும் நடிக்க வைக்கும்மாறு கேட்டுள்ளார். அதற்கு இமானுவேல் ராஜா, படம் எடுக்க பணம் குறைவாக உள்ளது. நீங்கள் முன் பணமாக 1 லட்சம் ரூபாய் கொடுங்கள் படம் நடித்து வெளியானதும் உங்களுடைய சம்பளத்துடன் இந்த பணத்தையும் சேர்த்து கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி ஒரு லட்சம் ரூபாய் கார்த்திக் ராஜா கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, இமானுவேல் ராஜா தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் சினிமா ஆடிசன் நடைபெறுவதாக வர சொல்லியுள்ளார். அங்கு சென்ற போது, இமானுவேல் ராஜா தன்னை ஒரு இயக்குநர் போலவே காட்டியுள்ளர். அப்போது இமானுவேல் ராஜா அறையில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கார்த்திக் ராஜாவிடம் தனியாக அழைத்து பேசியுள்ளர்.

அப்போது அந்த பெண் இமானுவேல் ராஜாவை நம்ப வேண்டாம் எனவும், என்னைப் போல் பல பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்ததை கூறி, அவர்களிடம் இமானுவேல் ராஜா விரும்பும் நேரங்களில் உல்லாசமாக இருந்து அதனை ரகசிய கேமராக்களில் பதிவு செய்து கொள்வார். பின் அந்த வீடியோவை இனையதளத்தில் பதிவு செய்து விடுவதாக மிரட்டி பணம் பறித்து வருகிறார். என்னிட்ட நகை பணம் என பல லட்சம் பறித்து விட்டார், எனவே இங்கிருந்து செல்லும் படி கூறியுள்ளார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட கார்த்திக் ராஜா தனது பணத்தை திரும்ப பெற இமானுவேல் ராஜாவை தங்கி இருந்த நட்சத்திர விடுதியின் அறைக்கு சென்ற போது, அங்கு மேஜையில் கைதுப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. இதனால், அச்சம் அடைந்த கார்த்திக் ராஜா  ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர், கை துப்பாக்கி குறித்து க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக க்யூ பிரிவு போலீசார் இமானுவேல் ராஜாவை தேடி நட்சத்திர விடுதிக்கு சென்றனர். க்யூ பிரிவு போலீசார் வருவதை அறிந்த இமானுவேல் ராஜா அறையை காலி செய்து விட்டு தப்பினார். பின்னர் க்யூ பிரிவு போலீசார் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இமானுவேல் ராஜாவை கைது செய்து, அவனிடம் இருந்த கை துப்பாக்கியை சோதனை செய்தததில், அது சிகிரெட் பற்றவைக்கும் லைட்டர் என்பது தெரியவந்தது. உடனடியாக இமானுவேல் ராஜாவை க்யூ பிரிவு போலீசார்  ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இமானுவேல் ராஜாவிடம் இருந்த ஏடிஎம் கார்டுகள், காசோலைகள், கவரிங் செயின், கவரிங் தோடு ஒரு ஜோடி, ஆண்ட்ராய்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செல்போன்களை ஆய்வு செய்தபோது, 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோகள் மற்றும் பெண்களுடன் இமானுவேல் ராஜா உல்லாசமாக இருந்த வீடியோ போட்டோக்கள் இருந்ததுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இமானுவேல் ராஜாவிடம் போலீஸ் பாணியில் கிடுக்கு பிடி விசாரனை நடத்தினர். விசாரணையில் கடந்த ஆண்டு இமானுவேல் ராஜா இணைய தளம் மூலமாக பெண்கள்  பாலியல் தொழில் செய்யும்  ‘CALL GIRL’ என்ற இனையதள பக்கத்தின் வழியாக 2 பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க பதிவு செய்துள்ளார்.

இப்பதிவிற்கு விருப்பம் தெரிவித்த அந்த இரு பெண்களுடன் அறை எடுத்து தங்கி தன்னை சினிமா இயக்குநர் என அறிமுகம் செய்துள்ளார். தொடக்கத்தில் பணம் கொடுத்து உல்லாமாக இருந்த இமானுவேல் ராஜா, அவர்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்த 2 பெண்களையும் அவர்களது தோழிகளையும் பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று பணம் எதுவும் கொடுக்காமல் தான் விரும்பிய போதெல்லாம் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.

மேலும் புதுமுக நடிகைகள் தேவைப்படுவதால், இளம்பெண்கள் இருந்தால் தன்னிடம் அறிமுகப்படுத்துமாறு அந்த பெண்களிடம் இமானுவேல் ராஜா கூறியுள்ளார். இதற்கு கமிஷன் தொகை தருவதாகவும் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அவ்விரு பெண்களும், தங்களுக்கு தெரிந்த கணவனரால் கை விடப்பட்டவர்கள்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் சினிமாவில் நடிக்க முயற்ச்சிக்கும் இளம் கல்லூரி பெண்களை இமானுவேல் ராஜாவிடம் அழைத்து வந்துள்ளனர்.

பெண்களை, பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்க வைத்து சினிமா திரைக்கேற்ற முகத்தோற்ற மாடலிங் போட்டோ தேவை என கூறி, அரை நிர்வாணமாக பல்வேறு கோணங்களில் படம் பிடித்து அவர்களுடன் விடுதியில் உல்லாமாக இருந்துள்ளர். உல்லாசமாக இருப்பதை ரகசிய கேமராவில் பதிவு செய்து அதனை காட்டி பல பெண்களை இமானுவேல் ராஜா சீரழித்துள்ளார்.

இவர்களில் பல பெண்களை மிரட்டி லட்சணக்கில் பணம் பறித்து சொகுசு வாழ்கை அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இவர் ஏற்கனவே, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படடு பாளையங்கோட்டை சிறையில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், கார்த்திக் ராஜா அளித்த மோசடி புகாரின் அடிப்படையில் இமானுவேல் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives