மய்யித்தில் மாகாண சபை பயணமா? படித்தும் பண்பு கெட்ட சிலர்! – மனம் வருந்தி கர்சித்த நௌஷாட்!!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
கொவிட் – 19 ஜனாஸா விவகாரத்தில் அடக்குவதற்கான அனுமதி எட்டியதும் அனைவரும் சந்தோசப்பட்டோம்.

இதற்காக மூன்றாவது ஜனாஸா எரிப்பு நாளிலிருந்து அயராது பாடுபட்ட இலைமறை காயாகவுள்ள அரசியல்வாதிகள், தனவந்தவர்கள் பலரது முயற்சிகளை நானறிந்துள்ளேன்.
இதனடிப்படையில் அடக்கத்துக்கு அனுமதி கொடுத்த அரசுக்கு நன்றிகள்.
இதையடுத்து அடுத்த ஒரு சிலர் அரசியல் குளிர்காய உலாசிப்பது சமயோசனமற்றது.
சரி, இவையொருபுறமிருக்க தற்போது சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கும் ஒரு விடயமான “சம்மாந்துறை மையவாடியில் அடக்கம் செய்ய மறுத்தது தவிசாளரே” எனும் குற்றச்சாட்டு;
இது குறித்து தகவலறிவதற்காக தவிசாளரை நான் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்;
“நௌஷாட் கையொப்பமிட்டால் அடக்கத்துக்கு அனுமதி கிடைத்திடுமா? அப்படியென்றால் கொவிட் ஜனாஸா எரிப்பு ஆரம்பத்திலேயே முதலாவதாக எமதூரை பரிந்துரைத்த எமது சபை. இப்போது ஏன் அதை மறுக்க வேண்டும்.
புத்தியாக சிந்திப்பவர்களுக்கு இது நன்றாக புரியும். இதை தடுப்பதில் எனக்கு என்ன தனிப்பட்ட இலாபம் உள்ளது?
இதில் ஒரு சிலர் மாகாண சபைக்கு வாக்கு தேட வழியில்லாமல் குடைகின்றனர்.
இப்படி பதிவிடுபவர்கள் படிப்பறிவுள்ளவர்களா என மனதில் தோனுகின்றது.
அண்மையில் எமது சபை உறுப்பினர் மாஹிர் அவர்களால் ஜனாஸா எரிப்பு விவகாரத்தை எதிர்ப்பு பிரேரனையொன்று கொண்டு, சமூக அக்கறையுடன் அவர் கொண்டுவந்த பிரேரனையை சபையால் ஏகமானதாக ஒப்புதல் கொண்டோம்.
இதன் பிறகு கடந்த வியாழன்று கூட வைத்தியர் கபீர், நாகூர் ஆரிப் உட்பட அதிகாரிகள் பொறியியலாளர்கள் பலரும் குறித்த மையவாடியை பார்வையிட்டு சுகாதார உயர் குழுவுக்கு அறிக்கை வழங்கியுள்ளனர்.
இப்படியிருந்த நிலையில் சுகாதார உயர் மட்டங்கள், நிபுணத்துவ குழுக்கள் பரிந்துரை செய்யாத எமது பிரதேசத்தை, ஏதோ நான் தடுத்தாக புத்தியற்ற பதிவிடும் சிலரை எண்ணுகையில் அவர்களின் வெகுலித்தனம் தெளிவாக தெரிகின்றது.
இது அனைவரும் அறிந்த விடயம் பல போராட்டங்கள், பலரது துஆக்களால் கிடைத்த இந்த உரிமை.
இதனை மனசாட்சி இல்லாதவன் கூட தடுக்கமாட்டான்.
எனவே, இப்படியான கீழ்த்தரமான பதிவுகளில் இருந்து சிலர் விலகி அமைதி காப்பது அவர்கள் சமூகத்துக்கு செய்யும் பாரிய நன்மை என நினைக்கின்றேன்” – என்றார்.
✍️ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives