மக்கள் வாழ்வில் தொலைத்தொடர்பு சாதனங்களின் வகிபங்கு.

Share on facebook
Share on twitter
Share on whatsapp

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித குலம்  தனது  ஆறாம் அறிவைப் பயன்படுத்தி பெற்றதே இந்த தொலைதொடர்பு சாதனங்களாகும்.அந்த வகையில் தொலைத்தொடர்பு  சாதனங்கள் என்பதன் மூலம் கருதப்படுவது யாதெனில் ஓர் இடத்தில் இருந்து தொலைவில் இருக்கும் மற்றுமொரு இடத்தோடு  கருத்துகளை மற்றும் எண்ணங்களை ஓருவருக்கொருவர்  பரிமாறிக் கொள்ளும் செயற்பாடாகும்.இங்கு தகவல்களை அனுப்புபவரும் பெறுபவரும் எவ்வளவு முக்கியமோ அதை விட மேலாக  தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்படும் சாதனம் இன்றியமையாததாகும்.

தொலைத்தொடர்பானது ஆதி காலம் தொட்டு இன்று வரை அத்தியாவசியமானதாகும்.இன்று மனிதன் நிலவில் குடியேறிய பிறகும் கூட மனித  குலத்தின்  அடிப்படைத்  தேவையாகத் திகழ்வது தகவல் தொடர்பாடலாடும்.

அந்த வகையில்  ஆரம்ப காலத்தில் மனிதன் மரக்கட்டை ,களிமண் ,பாறை,எலும்பு  முதலானவற்றை தொலைதொடர்பு சாதனமாக பயன்படுத்தினான்.மேலும் இடை காலத்தில் வாழந்த மனிதர்கள் புறாக்கள் ,தீப்பந்தம்,ஒற்றையர்கள்,தூதுவர்கள்,தோழியர்கள்  போன்றவற்றினை  பயன்படுத்தியுள்ளனர்.தற்காலத்தில்  கைத்தொழில் புரட்சி ,உலகமயாமதல் முதலானவற்றில் பல்பரிமாற்ற தன்மையினை உள்வாங்கிக்  கொண்டே தொலைதொடர்பு சாதனங்கள் வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அந்த வகையில் தற்காலத்தில் தொலைக்காட்சி ,தொலைபேசி ,வானொலி,ரேடர். பெக்ஸ்,ஈமெயில் இணையம் கணினி செய்மதி முதலானவை மக்களை தன்வசம் ஈர்த்து வைத்துள்ளது.இத்தகைய தொலைதொடர்பு சாதனங்களானது ஓர் மனிதன் உயிர் வாழ  ஒட்சிசன் எவ்வாறு முக்கியமானதொன்றாக விளங்குகின்றதோ அதே அளவு இச் சாதனங்களின் தேவைப்படும் உறுதி செய்யப்பட்டுள்ளது.தொலைதொடர்பு சாதனங்களையும் மனிதர்களையும் பிரித்து வேறுபடுத்த முடியாத அளவிற்கு பின்னிப்பிணைந்துள்ளது.அதாவது குரல்,செய்தி,காட்சி என்பவற்றை காவிச் சென்று மக்களின் காலடியில் தகவல்களை கொண்டு செல்கின்றது. ஒரு சில வினாடிகளில் உலகின் ஒரு பாகத்தில் இருந்து மறு பாகத்திற்கு  தவல்களை கொண்டு செல்வது நடைமுறைக்கு சாத்தியமாகியுள்ளது.

தற்காலத்தில் தொலைதொடர்பு சாதங்களின் அளப்பெரிய சேவையாக காணப்படுவது யாதெனில் மனித உறவுகளின் பாலமாகக் காணப்படுவதாகும்.அதாவது தற்கால சமுகத்தில் நாகரீக வளர்ச்சி ,வேலைப்பளு,சமூக ஏற்றத்தாழ்வு,பொருளீட்டல் முயற்சி,சமூக  அடக்குமுறை முதலான விடயங்களினால்  தேசம் கடந்து சென்று வாழவும் ,தனிப்படுத்தப்பட்ட சூழல் சிலருக்கு ஏற்பட்டுள்ள    இக் காலப்பகுதியில் தத்தமது குடும்ப அங்கத்தவர்கள் , உறவினர்கள்,நண்பர்கள் முதலான உறவு முறைகளில் எவ்விதமான தங்கு தடை இன்றி இயல்பு போன்று தகவல்களை தங்களது எண்ணங்கள் ,விருப்பு, வெறுப்புக்கள், அன்பு,பாசம் முதலானவற்றை வெளிப்படுத்த தனிமை  என்ற உணர்வை இல்லாமல் செய்யும் ஓர் உத்தியாக இந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் செயற்பட்டு வருகின்றன.

அது மட்டுமன்றி  ஏழை ,பணக்காரன் என்ற வேறுபாடின்றி தகவல்கள் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அது அனைவரையும் சென்றடையும் நிலைக்கு பெரிதும் துணை புரிவது தொலைதொடர்பு சாதனங்களே ஆகும்.இதில் தொலைக்காட்சி,வானொலி,இணையம்,முகநூல் முதலானவை பெரிதும் பங்களிப்புச் செய்கின்றது.

முதன் முதலில் ஐக்கிய அமெரிக்க “ரேலஸ்ரார் ” என்ற செய்மதியை விண்வெளிக்கு அனுப்பியதுடன் சர்வதேச தொலைச் செய்திப் பரிமாற்றத்தில் ஒரு புதிய திருப்புமுனை  ஆரம்பமாகியதுடன் இது தொலைதொடர்பு சாதனங்களின் புதிய அதியாயமாகவும் பரினாமித்து செய்மதிகள் விண்ணுக்கு ஏவி பல்வேறு நாடுகள் தத்தமது செய்திப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் தொலைபேசிக்  கட்டமைப்பு இணையத்தின் வளர்ச்சியில் நேரடிப்பங்கு வகிக்கின்றது.அது மட்டுமன்றி இணையத்தின் வருகையானது மனித வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் சக்தியாய் மாறிவிட்டது.மனித பண்பாட்டு நடை முறைகள் ,வாழ்க்கை சிந்தனைகள்,வாழ்வின்  அன்றாட நடைமுறைகள் அனைத்தையும் அப்படியோ புரட்டிப்போட்டு விட்டது என்றால் மிகையாகாது.அது மாத்திரமின்றி இதன் வருகை கணினியின் இலக்கணத்தையே மாற்றி விட்டது.

இன்று இணையம்,கணணி என்பவற்றினூடாக மக்கள் கடிதப் போக்குவரத்தினை மேற்கொள்கின்றனர் .அதாவது மின்னஞ்சல்  மூலமாக உலகின் மூலையில் வசிப்பவருக்கும் கடிதம் அனுப்ப முடியும். இதனூடாக எமது தொலைதொடர்புகளை கண்டம் விட்டு கண்டம் வறை பேன முடியும்.

ரேடர் கருவியானது சர்வதசே ரீதியாக ஒவ்வொரு  அரசுகளும் ஏனைய அரசுகளின் சம்மதத்தினூடாகவும்  இரகசியமாகவும் ஏனைய அரசுகள் தொடர்பான தகவல்கள் அறிந்து கொள்வதற்கும் கண்கானிப்பதற்கும் பயன்படும் .அது மட்டுமன்றி விண்ணுக்குப் பயனங்களை ஆரம்பிக்கும் போது விமாணங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு ரேடர் கருவி பயன்படுகின்றது.

இணையத்தினதும் கனணியினதும் உதவிகளால்  எங்கோ மூலையில் இருந்து கொண்டு தமது கல்வி நடவக்கைகளை மேற்கொள்வது சாத்தியமாகின்றது.கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் தற்காலத்தில் இணைய வழி வகுப்புக்களை நாடாத்தி வருகின்றன.இதன் மூலம் கல்வி சார் பணிகளை முன்னெடுக்கும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

மேலும் நாளிதழ்  தரும் செய்திகளைப் போன்று சுடச்சுட செய்திகளை இணையம் காலடியில் கொண்டு சேர்கின்றது.அது மட்டுமன்றி சிலமணி நேரத்துக்கு ஒரு தடவை செய்திகள் புதிப்பிக்கப்பட்டு புதுபுது தகவல்களை  அறிந்து கொள்ளக்கூடிய  வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அச்சில் வெளிவந்த பிரபலாமான பத்திரிகைகளை தேவையான நேரத்தில் இலவசமாக இணையத்தில் மட்டும் பிரசுரிக்கப்படும் மின்னிதழ்கள் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

தற்போது வணிக நடவடிக்கைகள் கணினி ,இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவது தொலைதொடர்பு சாதனங்களின் பிரதிபலிப்பாகும்.அதாவது கணினி முன் அமர்ந்து கொண்டு இணையத்தில் கடைப்பரப்பில் உள்ள மெய்நிகர் அங்காடியில் தமக்குத் தேவையான பொருட்களை பார்வையிட்டு ,தெரிவு செய்து கொள்வனவு செய்யவும் பற்று அட்டை மூலம் இணைய வழியாகவே  பணம் செலுத்தவும் ,பொருள் வாங்கவும்  மின் வணிகம் மேற்கொள்ளவும் முடியுமாய் உள்ளது.

இணையம் ஒரு பொழுது போக்குத் தளமாகவும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.கடல் கடந்து இடம் பெரும் நிகழ்வுகளை தமது வீட்டில் இருந்து கொண்டு கண்டும் கேட்டும் மகிழும் அளவிற்கும் தனிமையை விரட்டும் ஓர்  சேவையினை ஆற்றியிருக்கின்றது.

இணையத்தினை தற்காலத்தில் மக்கள் சிறந்த வேலை வாய்ப்பு அலுவலமாகப் பயன்படுத்துகின்றனர் .பல்வேறு நாடுகளில் காணப்படும்  தொழில் வாய்ப்புக்களை எங்கிருந்து அறியவும் அவற்றுக்கு விண்ணப்பிக்கவும் அனைவராலும் முடிகிறது.அது மட்டுமன்றி வேலை வாய்ப்புக்களுக்கான நேர்முகப் பரிட்சைகளும் இனைய வழியாகவே தற்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு தொலைதொடர்பு சாதனங்கள்  தற்கால சமூகத்தின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதுடன் சமூக முன்னேற்றத்திற்கும் பக்க துணையாக விளங்குகின்றது.அது அனைத்துத் துறையிலும் தனது ஆதிக்கத்தை  நிலை நாட்டியுள்ளது. சமூகமாக இருக்கட்டும் கல்வி சார் பணிகளாக இருக்கட்டும் தொழில் வாய்ப்பு ,பொருளீட்டல் நடவடிக்கைகள் ,வணிகத்துறை அரசியல் என ஒன்றன் பின் ஒன்றாக கூறிக்  கொண்டே போகலாம் .தொலைதொடர்பு சாதனங்கள் இவ்வாறான ஒரு முகத்தை எவ்வளவு  சிறப்பாக கொண்டுள்ளதே அதே அளவிற்கு இதற்கு இன்னுமொரு மறுமுகம் உண்டு இவற்றின் மூலம் மக்கள் அழிவின்  விளிம்பில் நோக்கிச் செல்கிறார்கள் என்பதும் எம்மால் மறைக்க  முடியாத உணமையாகும்.

அந்த வகையில் தொலைத்தொடர்பு சாதனங்களினால் சில தீமைகளும் ஏற்படுகின்றன. அதாவது ஊடகங்களில் நடுநிலைமை என்பது அறவே அற்று போய்விடல்,சார்புத்தன்மை செய்திகள் உருவாக்கபடுதல்,இணையத்தில் பாலியல் தொடர்பான விவாதங்களே நடை பெறுதல்,இணைய குற்றங்கள் – “சைபர் க்ரைம்” நாளுக்கு நாள் அதிகரித்து வருதல்,காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகவோர்களாக மாற்றிவிடுதல்,மாரடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற ஆண்களின் நோயாக அடையாளம் காணப்பட்டவை ஊடக தாக்குதலால் பெண்களுக்கும் உரிய நோய்க் காரணியாகி விட்டது,விளம்பரம் மற்றும் வியாபார நோக்கமானது அறம், நேர்மை, துணிவு, போன்ற தனிமனித உயர்குணங்களை ஊடக துடைத்து எறிந்து வருகிறமை போன்றவைகளும் இடம்பெருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-(எம்.பி.எஸ்.பானு )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives

error: Content is protected !!