கருச்சிதைவு அபாயம் எப்போது நடக்கும், யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

கருச்சிதைவு அதிலும் தன்னிச்சையான கருச்சிதைவு என்பது ஒரு பெண் கருவுற்றிருக்கும் 20 வாரங்களுக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் நிகழ வாய்ப்புண்டு.

கருச்சிதைவு நிகழ பல்வேறு காரணங்கள் உண்டு. உணவு முறை, உடல் ஆரோக்கியம், வாழ்க்கை முறை என பல விதமான காரணங்கள் கருச்சிதைவை உண்டாக்க கூடும். ஒரு பெண் கருவுற்ற முதல் ட்ரைமெஸ்டரில் முதல் மூன்று மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். சிலருக்கு 20 வாரங்களின் போதும் நடக்கலாம். எனினும் இந்த காலம் அரிதாகவே நிகழ கூடும். இந்த கருச்சிதைவு பெண்களுக்கிடையே வேறுபடலாம்

​கருச்சிதைவு குறித்த புள்ளிவிவரம்

கர்ப்பத்துக்கு பிறகு வெற்றிகரமான பிரசவத்தை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை 100% ஆக இருப்பதில்லை. ஏனெனில் சில பெண்கள் கருவுறுதலை அறிவதற்கு முன்பே தன்னிச்சையான கருக்கலைப்புக்கு உள்ளாவார்கள். இந்த கர்ப்ப இழப்பு பாதி கர்ப்பங்களில் உண்டாகலாம். எனினும் இது அறியப்படாத கர்ப்பம் என்பதால் பலருக்கும் தெரிவதில்லை.

அதுவே ஒரு பெண் கருவுற்ற பிறகு கருவுறுதலை உணர்ந்த பிறகு 10 முதல் 15% பெண்கள் கருச்சிதைவை சந்திக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று.

​எப்போது கருச்சிதைவு

ஒரு பெண் கருவுற்றதை அறிந்த பிறகு அவர்களது இரண்டாவது அல்லது மூன்றாவது மாதங்களில் அதாவது 12 வது வாரங்களில் நடக்கலாம். 15% கருச்சிதைவுகள் இந்த காலத்தில் உண்டாகிறது. இதை அடுத்து நடக்கும் கருச்சிதைவு அதாவது 13 வாரங்களிலிருந்து 19 வாரங்களுக்கு இடையில் நடக்கும் போது கர்ப்பிணி பெண்ணின் இரண்டாம் ட்ரைமெஸ்டரில் 19 வாரங்களுக்குள் நடக்கும் கருச்சிதைவு தாமதமான கருச்சிதைவுகள் என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பத்தின் இந்த கால கட்டத்தில் உண்டாகும் இந்த கருச்சிதைவு கருச்சிதைவு என்று புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் இது பிரசவ இழப்பு என்று அழைக்கப்படுகிறது.

​கருச்சிதைவின் போது என்ன நடக்கிறது

கருச்சிதைவு ஆபத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆரம்ப கால கருச்சிதைவு பெண்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இது அசாதாரண குரோமோசோம்களால் உண்டாக கூடியவை. பல காரணங்களால் உண்டாகக்கூடிய கருச்சிதைவு விகிதம் குறித்து தெரிந்துகொள்வோம்.

ஒருபெண் கருவுற்ற 3 முதல் 4 வாரங்களில் கருமுட்டையும் விந்தணுவும் இணைந்து உருவாகு கருவானது கர்ப்பைக்கு உள் வைக்கும் நேரம். 50 முதல் 75% நேர்மறையான கர்ப்ப பரிசோதனைக்கு முன்பு இது நிகழ்கிறது. இது வேதியியல் கர்ப்பம் என்று அழைக்கப்படுகீறது.

பெண் கருவுற்ற 5 வது வாரம் கருச்சிதைவு விகிதமானது 21.3 % வரை இருக்கலாம் என்று 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தாய்வழி மற்றும் கருவின் காரணங்கள் பொறுத்து இந்த கருச்சிதைவு அதிக அல்லது குறைந்த ஆபத்தை கொண்டிருக்கலாம்.

6 முதல் 7 வாரங்கள் இந்காலத்தில் பெண்ணின் கருச்சிதைவு 5% வரை இருக்கலாம். இது கருவின் இதயத்துடிப்பு வரக்கூடிய காலம். பெண் கருவுற்ற 8 முதல் 13 வாரங்கள் அதாவது மூன்று மாத காலங்களில் கருச்சிதைவு குறைந்த விகிதமே உண்டாகிறது. அதாவது 2 முதல் 4% வரை மட்டுமே இருக்கும். அதனால் தான் பெண் கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வது.

அடுத்தது 14 முதல் 20 வாரங்கள் இந்த ஐந்தாவது மாதங்களில் கருச்சிதைவு என்பது 1 % மட்டுமே உண்டாகிறது என்பதால் இது வெகு அரிதானது தான்.

​யாருக்கு கருச்சிதைவு நிகழும் அபாயம்

பெண் கருத்தரித்த உடன் தங்களது ஆரோக்கியம் குறித்த முழு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மருத்துவரின் அறிவுரையோடு பரிசோதிக்கும் போது கருச்சிதைவு அபாயம் பெருமளவு குறைக்கப்படுகிறது.

ஒரு பெண் கூடுதல் வயதில் கருவுற்றிருக்கும் போது கருமுட்டையின் தரம் குறைந்து வருவது கர்ப்ப இழப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. கருமுட்டையில் அசாதாரணமான குரோமோசோம்களில் மரபணு பிரச்சனைகள் உள்ளது.

கருவுற்ற பெண்ணின் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருந்தால் 9 முதல் 17 % வரை இருக்கலாம். 35 வயதில் இருப்பவர்களுக்கு 20% ஆகவும். 40 வயதில் கருத்தரிப்பவர்களுக்கு 40% ஆகவும், 45 வயதுக்கு பிறகு கருவுறும் பெண்கள் 80% வரையும் கருச்சிதைவு அபாயத்தை எதிர்கொள்கிறார்கள்.

நாள்பட்ட நோய்கள், வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவையும் கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்க செய்யும். செயற்கை முறை கருத்தரிப்பை முதல் முறையாக மேற்கொள்ளும் போது சிலருக்கு கருச்சிதைவு உண்டாகலாம்.

​கருச்சிதைவுக்கு பிறகு

கருச்சிதைவு என்பது அதிலும் தன்னிச்சையாக நடக்க கூடிய இந்த கருச்சிதைவு பெண்களை உடல் அளவிலும் மனதளவிலும் அதிகமாக பாதிக்க செய்யும். மன ஆரோக்கியம் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமே பெறக்கூடும். அதனால் மனதளவில் அவர்கள் மீள்வது முக்கியமானது.

உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படகூடாது. கருச்சிதைவு முதலாவதாக இருந்தாலும் இரண்டாவதாக இருந்தாலும் அதற்கு பிந்தைய ஆரோக்கியமான கருத்தரிப்பு சாத்தியமானது தான். இது இயற்கையாக நடைபெறக்கூடியது என்பதால் மன அளவில் சோர்வு கொள்வது பாதிப்பிலிருந்து மீட்க நீண்ட நாட்கள் பிடிக்கும்.

ஒரு முறை கருச்சிதைவு நேர்ந்தால் மீண்டும் கருச்சிதைவு உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனினும் அனுபவிக்க மருத்துவரிடம் குறிப்பாக கருச்சிதைவு பாதிப்பு கொண்ட பெண்கள் தங்கள் வரலாறை முழுவதும் அறிந்த மருத்துவரை மட்டுமே அணுகுவதால் மீண்டும் கருவுற்ற பிறகு கருச்சிதைவு அபாயத்தை பெருமளவு தடுக்க முடியும்.

வெகு அரிதாக சில பெண்களுக்கு 1 முதல் 2% மீண்டும் கருச்சிதைவு நேரிட வாய்ப்புண்டு. எனினும் உடல் ஆரோக்கியமும், மன ரீதியாகவும் மீண்டு வருவதோடு சரியான சிகிச்சையும் கருவுறுதலை சாத்தியமாக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!