குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படிக் கண்டறிவது?

Share on facebook
Share on twitter
Share on whatsapp

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்ப்பகத்தில் தொடர்ந்து உறியும். அப்படி தொடர்ந்து உறியும் போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது. குழந்தை தொடர்ந்து உறிந்து அதற்கு தாய்ப்பால் கிடைத்தால் அதனை முழுங்கும்.

தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை முழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது. தொடர்ந்து உறிந்து கொண்டேயிருக்கும் அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.

பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம். தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.

குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்தியாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட ஐந்து முதல் ஏழு சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம். முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்சனை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.

குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.

குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும். இந்த இடைவேளியை கணக்கிடுங்கள். இடைவேளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.

சில குழந்தைகள் தூங்கும் நேரத்தில் மட்டும் வந்து தாய்ப்பால் குடிக்க நினைப்பார்கள். அது தாய்ப்பால் தேவைக்காக அல்லாமல் ஒரு அரவணைப்புத் தேவையாக இருக்கும். பகல் நேரங்களில் அல்லது முழித்துக் கொண்டிருக்கும் போது தாய்ப்பால் கேட்காமல் சரியாக தூங்கும் போது மட்டும் தாய்ப்பால் கேட்டால்… அது குழந்தை பசியாற்ற அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.

போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு. தாயிடமிருந்து நேரடியாக குடிக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் தனக்குத் தேவையான பாலை தானே உறிந்து குடிக்க வேண்டும். அதனால் குழந்தை தனக்குத் தேவையானளவு மட்டுமே உறிந்து குடிக்கும்.

பாட்டிலில் எடுத்து வைத்த தாய்ப்பாலோ அல்லது பவுடரை கலந்து கொடுப்பது அல்லது பசும்பாலை கொடுப்பது போன்ற நேரத்தில் தான் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான பால் சென்றிடும். ஏனென்றால் பாட்டிலில் குடிக்கும் போது அதன் நிப்பில் வழியாக பால் வந்து கொண்டேயிருக்கும். அதனை நிறுத்த வேண்டும் தனக்குப் போதும் என்று குழந்தைகளால் உணர முடியாது அளவுக்கு மீறி குடித்து விடுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives