காதலனுடன் வெளியே சென்ற பெண் தப்பிப்பதற்கு சொன்ன காரணம்! அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இந்தியாவில் காதலனுடன் வெளியே சென்ற இளம் பெண், பெற்றோரிடமிருந்து தப்புவதற்காக அவர் சொன்ன காரணத்தை கேட்டு பொலிசார் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை இளம் பெண் ஒருவருடன் வந்த பெற்றோர், புகார் ஒன்றை கொடுத்தனர். அதில், தன் மகள் கல்லூரி முடித்து வீடு திரும்பிய போது, திடீரென்று காரில் வந்து நான்கு பேர் கடத்தி சென்றுவிட்டதாகவும், அதன் அவர்களிடமிருந்து எங்கள் மகள் தப்பி வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து பொலிசார் குறித்த பெண்ணை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று, நடந்தது என்ன? எப்படி கடத்தல் நடந்தது? என்பது குறித்து நடித்து காண்பிக்கும் படி கூறியுள்ளனர்.

ஆனால் அந்த பெண் தயங்கியதால், பொலிசார் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அந்த பெண், இளைஞர் ஒருவருடன் தானாக இரு சக்கர வாகனத்தில் ஏறி செல்வது பதிவாகியிருந்தது.

இதனால் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரிடம் கேட்டுள்ளனர், பொலிசாரும் விசாரித்துள்ளனர். அப்போது கல்லூரி முடிந்ததும், நான் காதலனுடன் வெளியே சென்றிருந்தேன், வீட்டிற்கு வர தாமதமானதால் இப்படி ஒரு பொய்யை கூறியதாகவும், பெற்றோர் எச்சரிக்கை செய்து விட்டுவிடுவார்கள் என்று நினைத்தே இப்படி கூறினேன்.

புகார் கொடுப்பார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை, இறுதியில் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் அந்த மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives