பெண்கள் முன்னால் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து காட்டிய கோயில் பூசாரியை போலீசார் கைது ! CCTV கமராவில் பதிவு

இளம்பெண்கள் முன்னால் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அந்தரங்க உறுப்பை காட்டிய கோயில் பூசாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி எஸ்பிஐ பாலனி பகுதிகளில் ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றபடி இளம்பெண்களிடம் சில்மிஷம், ஆபாச சைகை காட்டுவதாகவும், பேண்ட் ஜிப்பை அவிழ்த்து, அந்தரங்க உறுப்பை காட்டி வந்துள்ளார். இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்தும், இருசக்கர வாகன நம்பரை வைத்தும் உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் பழைய பல்லாவரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பாலாஜி (30) என்பதும், அதே பகுதியில்  கோயில் பூசாரியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!