காருக்குள் இருந்து கேட்ட அலறல் சத்தம்! கதறிய யாஷிகா ஆனந்த்… வெளியான பகீர் தகவல்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு விபத்தில் சிக்கியதை அடுத்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானதில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், யாஷிகா உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கார் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

கார் தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில் அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அப்போது நள்ளிரவு ஒரு மணி என்பதால் சாலையில் வாகனம் மற்றும் மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது.

 

எனவே காருக்குள் சிக்கிய யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் எங்களை காப்பாற்றுங்கள் என அபாய குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த அலறலைக் கேட்ட அப்பகுதி மக்கள் அவசர, அவசரமாக ஓடி வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அப்போது தான் விபத்தில் சிக்கியது நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போக்குவரத்து போலீசார் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்த காரை வெளியே எடுத்து சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது யாஷிகாவும் அவருடைய நண்பர்களும் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives