அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியொரு அறையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த அறையில் இருந்த பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி அங்கத்தவர்களான பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட மூன்று பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.