கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி பரப்பப்படும் போலியான விடயங்களைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

கொரோனா வைரஸ் இதுவரை உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மூச்சுத் திணறலை அதிகரிக்கும் இந்த வைரஸ், கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. இப்போது பல நாடுகள் அதன் தடுப்பு மருந்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. பல தடுப்பூசிகளும் ஒப்புதல் பெறத் தொடங்கியுள்ளன.

ஆனால், இது குறித்து சமூக ஊடகங்களில் பல விடயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தடுப்பூசி பற்றி பரப்பப்படும் போலியான விஷங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். தற்போது இது குறித்துள்ள பல வதந்திகளைப் பற்றியும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

• வதந்தி: அவசரமாக செய்யப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை

விளக்கம்: தடுப்பூசி தயாரிக்க நிச்சயமாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால், தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) தயாரிக்கும் வேகம் அதிகரிக்கப்பட்டது. இந்த பணி மிக வேகமாக நடந்தது என்றும் நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள காரணம் வேறு. தடுப்பூசி தயாரிப்பதில் எந்தவிதமான கவனக்குறைவோ அல்லது அவசரமோ காட்டப்படவில்லை. மாறாக, அரசாங்கத்திடமிருந்தும் சுகாதார நிறுவனத்திடமிருந்தும் ஒப்புதல்கள் ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டன. ஒப்புதலில் உள்ள தேவையற்ற சிரமங்கள் தளர்த்தப்பட்டன.

• வதந்தி: தடுப்பூசி மூலம் உங்களுக்கு கொவிட் தொற்று ஏற்படலாம்

விளக்கம்: நிச்சயமாக இல்லை. பெரும்பாலான தடுப்பூசிகளில் வைரஸின் முழு அளவு இருப்பதில்லை. தடுப்பூசியில் வைரஸின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல் அல்லது பிற எதிர்வினைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் விளைவுகளால் ஏற்படுகின்றன. கொவிட் வைரசும் சில தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இது மிகவும் பலவீனமான வைரஸ் என்பதால், இதனால் உங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. காசநோய் மற்றும் பெரியம்மை போன்ற நோய்களிலும் இதுபோன்ற பல தடுப்பூசிகள் முன்னர் பயன்படுத்தப்பட்டுள்ளன.

• வதந்தி: தடுப்பூசி போட்ட பிறகு முகக்கவசம் தேவையில்லை

விளக்கம்: இல்லை. தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கும், வைரஸ் உடலில் பரவாமல் தடுப்பதற்கும் மட்டுமே செயல்படும். இருப்பினும், இதற்கு பல மாதங்கள் ஆகலாம். நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கூட தெளிவாக சொல்ல முடியாது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாது. எனவே, எதிர்கால ஆபத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது மிக முக்கியமான விஷயமாகும்.

• வதந்தி: தடுப்பூசியுடன் ஒரு சிப்பும் பொருத்தப்படும்

விளக்கம்: இது முற்றிலும் பொய்யான ஒரு செய்தியாகும். பல அறிக்கைகளில், கொரோனா தடுப்பூசி என்ற பெயரில் உடலில் சிப் பொருத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பூசியைக் கண்காணிக்க அதன் முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சில் ரேடியோ அதிர்வெண் குறிச்சொற்கள் இருக்கும் என்று அமெரிக்க நிறுவனம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த குறிச்சொற்கள் பெட்டியில் மட்டுமே இருக்கும். மைக்ரோசிப்கள் மிக பெரியவை. அவற்றை யாருக்கும் எளிதாக செலுத்த முடியாது. எனவே இந்த விஷயம் முற்றிலும் தவறானது.

• வதந்தி: உங்கள் டி.என்.ஏ ஒரு தடுப்பூசி மூலம் மாற்றப்படும்

விளக்கம்: ஃபைசர் மற்றும் மொர்டானா தடுப்பூசிகள், எம்.ஆர்.என்.ஏ-வால் தயாரிக்கப்படுகின்றன. இது உங்கள் டி.என்.ஏவை மாற்றும் என்று அர்த்தமல்ல. Covid -19 தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளை உடலுக்குள் கொண்டு வந்து மக்களின் டி.என்.ஏவை மாற்றும் என்று வதந்திகள் பரவின. இருப்பினும், இந்த கூற்று தவறானது. இந்த கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு எம்.ஆர்.என்.ஏ மரபணு ரீதியாக செல்கள் செருகப்படுகிறது. ஆனால் உங்கள் டி.என்.ஏ இருக்கும் உயிரணுக்களின் கருவை இவை அடையாது.

• வதந்தி: வாழ்க்கை முழுமைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்

விளக்கம்: இதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது. தகவல் கிடைத்தவரை, தடுப்பூசிக்குப் பிறகு பல வாரங்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ஆனால், இது காய்ச்சலில் கொடுக்கப்படும் தடுப்பூசி போல ஒரு வருடம் இருக்குமா அல்லது டெட்டனஸ் போல் சில ஆண்டுகள் வேலை செய்யுமா அல்லது போலியோ மற்றும் பெரியம்மை தடுப்பூசிகள் போல் வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா என்று சொல்வது கடினம். இருப்பினும் இந்த தடுப்பூசிக்குப் நிச்சயமாக கொவிட் தொற்று ஏற்படாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!