கொவிட் மரணங்களை உறுதிப்படுத்துவதில் சிக்கல்

கொவிட் மரணங்களை தடுப்பதற்காக முறையான செயற்றிட்டம் ஒன்று அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித்த அளுத்கே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறிப்பிடதக்களவு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

´நூற்றுக்கு 70 வீதமான மரணங்கள் 60 வயதுக்கும் அதிகமானவர்களாவர். எனவே இந்த வயது பிரிவினரை தெரிவுச் செய்து அவர்களுக்கான கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதை முகாமைத்துவப்படுத்துவது அவசியம். ஜனவரியில் 112 ஆக பதிவானது. ஆனால் பெப்ரவரி மாதத்தில் இதுவரை பதிவான மரணங்களுடன் ஒப்பிடும் போது மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஒரு நன்மையான விடயம் அல்ல.´

இதேவேளை கொவிட் மரணங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் அதாவது புள்ளிவிபரங்கள் குறித்து சுகாதார அமைச்சு விரைவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும் அடிமட்டத்தில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் அறிக்கையிடப்படாமையால் சுகாதார ஊழியர்கள் அசௌகரியத்தி;கு உள்ளாவதாகவும் அவர் கூறினார்.

´அடிமட்ட கொவிட் உயிரிழப்புகள் புள்ளிவிபரமாக வெளியில் வருவதில்லை. அதனால் சுகாதார ஊழியர்களுக்கு பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டியுள்ளது. தேசிய அளவில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை பதிவாகும் நிலையில் கிராமங்களில் பதிவாகும் மரணங்கள் பதியப்படுவதில்லை. இதனால் சமூகத்தில் பாரிய பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!