மஹபொல நிதியில் 2020 – 2025 மூலோபாய திட்டத்திற்கு அமைவாக எதிர்வரும் 5 ஆண்டு காலப்பகுதியில் தற்பொழுது வழங்கப்படும் புலமைப்பரிசில் எண்ணிக்கையை 30% தினால் அதிகரிப்பதற்கும், புலமைப்பரிசில் தொகையை 25% தினால் அதிகரிப்பதற்கும் அதாவது 7,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது 11 பில்லியன் ரூபா நிதியை 20 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதன் மூலம் புரள்வு மூலம் பெறப்படும் மேலதிக வருமானம் நிதியத்தில் ஒன்றிணைக்கும் திட்டத்தை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்று மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளையின் பணிப்பாளர் .பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.