இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயர்வேத புகைத்தல் (கறுவா சிகரெட்) நாட்டின் உற்பத்தி துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று கைத்தொழில் துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கறுவாவினால் தயாரிக்கப்பட்ட (Lion Heart) என்று பெயரிடப்பட்ட இந்த ஆயர்வேத சிகரெட்டை சமந்த புஞ்சியேவா தயாரித்துள்ளார்.
நாட்டின் மூலப்பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், புகைத்தலில் ஆர்வங்கொண்டுள்ளவர்களை அதிலிருந்து விடுபடுவதற்கு முன்னோடி தயாரிப்பாக இது ஆகும் என்ற அமைச்சர் கூறினார்.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்றைய தினம் (17) இதுதொடர்பான அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.