CCTV | பதுளை- பசறை வீதியில் பஸ் பள்ளத்தில் விழுந்ததில் மேலும் 7 பேர் உயிரிழப்பு !! பார்ப்பதற்கு மனதை உலுக்கும் சி.சி.டி.வி வீடியோ

பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழப்பு: 30பேர் படுகாயம்

பதுளை- பசறை வீதியூடாக பயணித்த பேருந்தொன்று இன்று (சனிக்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணம் மேற்கொண்ட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை- லுனுகலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து,  பசறை 13ஆம் கட்டையில் வைத்து சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!