இலங்கைக்கு சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பீஜிங்கிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட இந்த தடுப்பூசிகள், பாதுகாப்பான முறையில் பிரதான சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த மாதத்தில் மூன்று மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குடும்ப சுகாதார சேவைப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives