அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை.. அமைச்சர் தெளிவான விளக்கம்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

கோதுமை மா வின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்று கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அழகியவன்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், தற்போது கோதுமை மா 12 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது. ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோதுமை மா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . இதன்போது முன்னைய விலைக்கே மாவை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

இதற்கமைவாக பொது மக்களும் பேக்கரி தயாரிப்பாளர்களும் பயன்படுத்தும் மாவின் விலை எந்தவகையில் அதிகரிக்காது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives