ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக 32 வயதுடைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜே ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இளம் வயதுடைய ஒருவர் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியை பொறுப்பேற்ற முதல் சந்தர்ப்பம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் உசேன் இதற்கு முன்னர் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் குறித்த நியமனத்திற்கு பின்னர் கருத்து தெரிவித்த அவர், இந்த மரியாதையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
மேலும் தன்னை பரிந்துரைத்தமைக்கும் இந்த மதிப்புமிக்க பதவிக்கு தகுதியானவர் என தன்னை கருதியதற்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் உள்ளவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.