இலங்கை மேற்கிந்திய தீவுகள் போட்டி அட்டவணையில் மாற்றம்

இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் தற்போது டி20 போட்டிகள் முதலில் நடைபெற்று இறுதியிலேயே டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி மூன்று டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்துக்கொள்ளும்;. மேற்கிந்திய தீவு, இலங்கை அணிகளுக்கான முதல் டி20 போட்டி மார்ச் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2 ஆவது மற்றும் 3 ஆவது டி20 போட்டிகள் முறையே மார்ச் 05 மற்றும் 07 ஆகிய திகதிகளில் நடைபெறும். ஒருநாள் தொடர் போட்டியானது மார்ச் 10 ஆம் திகதி தொடங்குகின்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 12 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தொடருக்கு முன்பு, இலங்கை மார்ச் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடும். இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 21 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 29 ஆம் திகதியும் ஆரம்பமாகும்.

இலங்கை அணி மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்திற்காக 23 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி வீரர்களை கிரிக்கெட் தேர்வுக் குழு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!