Just In | 2021 ஐ.பி.எல் தொடர் இடைநிறுத்தப்பட்ட காரணம் வெளியானது

2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல அணிகளின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திகதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல். அணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து கவலை தெரிவிப்பதால் ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு என தகவல் வந்துள்ளது. இந்த தகவலை பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா உறுதிபடுத்தியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகம், தொற்று பரவாமல் தடுக்க, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் அனைத்து உருப்பினர்களையும் பயோ பபிள் என்ற பாதுகாக்கப்பட்ட வட்டத்திற்குள் வைத்திருந்தது. எனினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இரு வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!