டூப்லெஸ்ஸிஸ் தனது இடுப்பு பகுதியில் உருது மொழியில் போட்டிருக்கும் டாட்டூவின் அர்த்தம் என்ன தெரியுமா ?

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்ரிக்க வீரரான டுயூப்ளசிஸ், தன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களையும், தன் மனதின் வெளிப்பாடுகளையும் தனது உடம்பில் பச்சையாக குத்திக் கொள்ளும் பழக்கமுடையவர். ஏற்கனவே தனது கைப்பகுதியில் அதுபோன்ற சம்பவங்களின் நிகழ்வுகளை சின்னங்களாகவும், எழுத்துக்களாகவும் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் அவர் தற்போது தனது இடது விலா எலும்புக்கு மேல் ஒரு வார்த்தையை பச்சைக் குத்திக்கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் பலரும் அதன் அர்த்தம் என்னவென்று புரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை நாங்கள் கீழே வழங்கியுள்ளோம். உருது மொழியில் ஃபஸல் என்று இருக்கும் அந்த வார்த்தைக்கான அர்த்தம் “கிருபை” என்பதாகும். மேலும் சர்வ வல்லமையுள்ள விசுவாசி என்றும் அதற்கு பொருள்படும்.  கடவுளின் கிருபையால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்காக, அந்த கடவுளுக்கு இதை அர்பணித்திருக்கிறார் டுயூப்ளசிஸ்.

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அறிமுகமானதையும், தனது கையில் சின்னங்களாக பச்சைக் குத்தியிருக்கிறார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அவர் அறிமுகமான அடிலெய்டு மைதானத்தின் பெயரையும் குத்திக் கொண்டுள்ள அவர், தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக கருதும் தன்னுடைய திருமணம் நடந்து முடிந்த பின்பு அகபே என்ற வார்த்தையையும் தனது உடலில் பச்சையாக குத்திக்கொண்டுள்ளார்.

அகபே என்ற வார்த்தைக்கு நிபந்தனையற்ற அன்பு என்று பொருள்படும். தன் மனைவியின் மீது அளவற்ற அன்பை அவர் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தவே அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives