டோனி அன்று எடுத்த முடிவு இப்போ சரி என்று தெரியுது! பல விஷயங்களை கூறிய ரவிசாஸ்திரி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனி, டெஸ்ட் போட்டியில் இருந்து விலக முடிவு செய்தது தன்னலமற்றது என்று அணியின் பயிற்சியாளர ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக மூன்று வித ஐசிசி கோப்பைகளை வாங்கிக் கொடுத்து பெருமை சேர்த்த டோனி, தற்போது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், டோனியின் டெஸ்ட் போட்டி ஓய்வு மற்றும் அவரது விலகல் குறித்து இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரான ரவிசாஸ்திரி தான் எழுதிய The Players in My Life என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதில், டோனியின் முடிவு எதிர்பாரதது, ஆனால் தைரியமான மற்றும் சுயநலமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

டோனியின் அந்த முடிவை நான் முழுமையாக அப்போது ஏற்கவில்லை, ஆனால் இப்போது அது சரியான முடிவு என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், டோனி உலகின் மிகப் பெரிய வீரர் இரண்டு உலகக்கோப்பைகள் உட்பட மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்கு வென்று கொடுத்தவர்.

 

அணியின் மூன்று சிறந்த வீரர்களாக நான் வைத்துள்ளவர்களில் அவரும் ஒருவர், டோனி டெஸ்ட் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அப்போது எனக்கு புரியவில்லை, நான் அவருடைய முடிவை மாற்ற முயன்றேன்.

ஆனால், டோனி தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். இப்போது நான் அதை திரும்பி பார்க்கும் போது, முடிவு சரியானது மற்றும் தன்னலமற்றது என்று கூறுவேன். கிரிக்கெட்டில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பது என்பது மிகவும் எளிதானது கிடையாது,

ஆனால் டோனி அந்த விஷயத்தில் தன்னலமற்று செய்தார். சச்சின், கபில்தேவை தொடர்ந்து எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய மூன்றாவது வீரர் என்றால் அது டோனி தான் என்று கூறியுள்ளார்.

டோனி கடந்த 2014-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது திடீரென்று தன்னுடைய கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின் அந்த பொறுப்பை கோஹ்லி ஏற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு டோனி அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives