ஜம்மு காஷ்மீரில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வெறும் 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி இன்று உலகக்கிண்ண தொடருக்கான இந்திய இடம்பிடித்துள்ளார் உம்ரான் மாலிக்.

Share on facebook
Share on twitter
Share on whatsapp

2021ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய அணியின் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் வலைப்பந்துவீச்சாளராக இளம் வீரர் உம்ரான் மாலிக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உம்ரான் மாலிக் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பந்து வீசியதைப் பார்த்த விராட் கோலி, இவரது திறமையை வெகுவாகப் பாராட்டினார்.

ஜம்மு காஷ்மீரின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான உம்ரான் மாலிக். இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார். இந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெறும் 3 போட்டிகளில் பங்கேற்றாலும் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி பலரது கவனத்தை ஈர்த்தார்.

இவரது திறமையைக் கண்டு விராட் கோலியும் வெகுவாக பாராட்டினார். ஐ.பி.எல். தொடர் ஒவ்வொரு ஆண்டும் பல வீரர்களின் திறமைகளை வளர்க்கிறது. ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதைப் பார்க்க நன்றாக உள்ளது என தெரிவித்தார். ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த அவர் தனது அதிவேக பந்துவீச்சின் மூலம் தற்போது டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நெட் பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல்.லில் மணிக்கு 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அதிவேகமாக பந்துவீசியவர்களின் பட்டியலில் உம்ரான் மாலிக் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோ னா வை ரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உம்ரான் மாலிக் மாற்று வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives

error: Content is protected !!