இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சமீப காலங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்துவருகின்றது.
இதனைத்தொடர்ந்து ஒரு சில மாநிலங்களில் பாடசாலைகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் பாடசாலைக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலைகள் திறந்து இதுவரையில் தரம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒடிசா மாநிலத்தில் கடந்த 8 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டது. முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சான்டைசர் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாடசாலைகள் திறக்கப்பட்டும், பாடசாலைகள் திறந்த இரண்டே நாட்களில் 31 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.