‘இதுக்கா நாம கஷ்டப்பட்டோம்’… ‘புலம்பும் தாலிபான் வீரர்கள்’… இப்படி ஒரு ட்விஸ்டை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய நாட்டுப் படைகள் முழுமையாக வெளியேறியதையடுத்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசாங்கம் தொடர்பான அறிவிப்பு 2 தினங்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அனைவரும்  ஒருங்கிணைந்த அரசாக புதிய அரசு அமையும் என்று தாலிபான்கள் கூறியிருந்தனர்.

Taliban Govt in Afghanistan: Mullah Yaqoob and Haqqani Factions Fight

இந்நிலையில் புதிதாக அமையவுள்ள அரசில் முக்கியப் பதவிகளைக் கைப்பற்ற மிகப்பெரிய சண்டை நடைபெற்று வருகிறது. தாலிபான்களின் துணை அமைப்பான ஹக்கானி நெட்வொர்க் முக்கிய பதவிகளைக் கோரியுள்ள நிலையில்,  தாலிபான் அமைப்பைத் தொடங்கிய முகமது ஓமரின் மகன் முகமது யோக்கோபும் முக்கிய பதவிகளைப் பெறக் காய் நகர்த்தி வருகிறார்.

ஈரான் அரசைப் பின்பற்றி இஸ்லாமிக் எமிரேட்ஸ்  ஆப் ஆப்கானிஸ்தானில் அமைக்கத் தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அதிபரை விட அதிகாரம் பெற்றவராகவும் மதத் தலைவராகவும் சுப்ரீம் லீடர் ( உச்ச தலைவர்) இருப்பார். அந்த வகையில் மௌலவி ஹிபதுல்லா அகுந்ஸாதா தாலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. 2016ம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவர்,  அரசியல், மதம் மற்றும் ராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் அங்கீகாரம் படைத்தவராக உள்ளார்.

Taliban Govt in Afghanistan: Mullah Yaqoob and Haqqani Factions Fight

இவரே ஆப்கானிஸ்தானின் உச்ச தலைவராக அறிவிக்கப்படுவார் என்று கருதப்படுகிறது. இதுவரை இவர் பொதுவெளியில் தென்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கந்தகாரிலிருந்து அவர் செயலாற்றுவார் என்று கூறப்படுகிறது. மேலும் புதிய அரசில் ராணுவ பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று முகமது யோக்கோபு விருப்பம் தெரிவித்துள்ளார்.

Taliban Govt in Afghanistan: Mullah Yaqoob and Haqqani Factions Fight

அதேநேரத்தில் அரசியல் பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சன்னி இஸாமிக் குழுவின் துணை நிறுவனரான முல்லா பரடர் விரும்புகிறார். அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போர் புரிந்தவர்களுக்கு  தோகாவில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் கட்டளைகளைப் பிறப்பிக்க முடியாது என்று யாக்கோபு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேல்மட்ட தலைவர்களிடையே பதவி சண்டை ஏற்பட்டுள்ள விவகாரம் தாலிபான் வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives