குதிரையுடன் தகாத உறவில் ஈடுபட்ட கொடூரன்! அரைகுறை ஆடையில் தப்பி ஓடியபோது சுற்றிவளைத்து பொலிஸ் கைது..

Share on facebook
Share on twitter
Share on whatsapp

அமெரிக்காவில் குதிரையுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கைதி ஒருவர், சிறையில் இருந்து தப்பித்து ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்ற நேரத்தில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடந்துள்ளது.

ஜோனா பாரெட்-லெஸ்கோ (Jonah Barrett-Lesko) எனும் 25 வயது கைதி, கடந்த ஜூன் 17-ஆம் திகதி ஒரு மைதானத்தில் நள்ளிரவில் குதிரையுடன் உடலுறவு கொள்வது கமெராவில் சிக்கிய குற்றச்சாட்டில், செய்திகளில் தலைப்பாக இடம்பெற்றவர்.

 

மேலும் அவர் மீது பல்வேறு வழிப்பறி குற்றச்சட்டுகள் நிரூபிக்கப்பட்டு தென்மேற்கு கொலராடோவில் உள்ள லா பிளாட்டா கவுண்டி சிறையில் அகைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 21-ஆம் திகதி (செவ்வாய்கிழமை), ஜோனா பாரெட்-லெஸ்கோ சிறையில் இருந்து வெளியேறி தப்பினார்.

சற்று நேரத்தில், சிறைக்கு அருகிலுள்ள சில்லறை கடை வழியாக கைதிகளின் ஜம்ப்சூட் உடையில் ஒருவர் செல்வதாக பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தப்பியோடிய குற்றவாளி காணாமல் போனதாகக் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

தப்பியோடிய கைதி ஜோனாவை பிடிப்பதற்காக, உடனடியாக பொலிஸார் ஒரு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

சில நிமிடங்களில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலில், கைதி ஜோனா காட்டுப்பகுதியில் ஒளிந்திருப்பதாக தெரியவந்தது.

அந்த இடத்துக்கு பொலிஸார் சென்றபோது, ஜோனா வெறும் ‘பாக்ஸர்’ உள்ளாடையுடன், சிறைச்சாலைக்கு 1 மைல் தூரத்திலேயே இருக்கும் ‘அனிமாஸ்’ நதியில் குதித்து தப்பிக்க முயன்றார்.

ஆனால் கிட்டத்தட்ட 26 நிமிட துறத்தலுக்கு பிறகு, நான்கு பொலிஸார் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே ஜோனா மீது பல அத்துமீறல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், அவர் மீது தண்டனைக் காலத்தில் தப்பியோடியதாக குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives