100 நாப்கின்கள்.. 6 லிற்றர் பால்.. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ஆப்பிரிக்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் டெலிவரிக்கு பின் அவரது அனுபவத்தை குறித்து கூறியுள்ளார்.

ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள மாலியில் பகுதியில் வசித்து வருபவர் ஹலிமா சிஸ்ஸே. இவர் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று உலகத்திலேயே சாதனை பெண்மணியாக திகழ்ந்தார்.

அவர் கர்ப்பமாக இருந்த போது ஸ்கேன் செய்து பார்த்ததில் 7 குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள் மற்றும் 5 பெண் குழந்தைகள் என 9 குழந்தைகள் பிறந்தது.

9 குழந்தைகளை வளர்ப்பதில் அவர் சமாளிக்கும் சவால்கள் குறித்து ஹலிமா சிஸ்ஸே பகிர்ந்துள்ளார். அதில், முதலில் எனக்கு துணையாக இருக்கும் மருத்துவ குழுவுக்கும் நிதி உதவி வழங்கும் மாலி அரசுக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்த காலகட்டத்தில் ஒரு குழந்தையை வளர்க்கவே கடினமாக உள்ளது. அந்த வகையில் 9 குழந்தைகளை ஒரே நேரத்தில் சமாளிப்பது பயங்கர  கொடுமையான விஷயம். அவரது குழந்தைகளுக்கு தினமும் கிட்டத்தட்ட 100 நாப்கின்கள், 6 லிட்டர் பால் செலவாகிறது என்று தெரிவித்துள்ளார்.

பிரசவ வார்டில் இருக்கும் போது குழந்தை ஒவ்வொன்றாக வெளியே வந்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது எனது மனதில் ஏகப்பட்ட கேள்விகள் ஓடி கொண்டிருந்தது. தற்போது குழந்தைகள் பிறந்து 5 மாதங்கள் கடந்துவிட்டது. குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives

error: Content is protected !!