கோழி இறைச்சியின் பாகங்கள் சீனாவுக்கு
கோழி இறைச்சியின் பாகங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கோழி இறைச்சியிலிருந்து அகற்றப்படும் கோழித் தலை மற்றும் கால்களே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கோழி இறைச்சியிலிருந்து அகற்றப்படும் தலை மற்றும் கால்கள் அங்கு பல்வேறு உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களாக பயன் படுத்தப்படுகின்றன. அதனால் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் நீண்டகாலம் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கடந்த அரசாங்கங்களிடம் கோரியிருந்தார்கள். இதுதொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோழி இறைச்சி உற்பத்தி யாளர்கள் சீன வர்த்தக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு அந்த நிறுவனங்களினால் விருப்பமும் தெரிவிக் கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியிலேயே தற்போது இதுதொடர் பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதி லிருந்து இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெ டுக்க முடியும். இருந்தபோதும் ஏற்றுமதியாளர்கள் அங்குள்ள வர்த்தக நிறுவனங்களை சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்றார்.