போதைப்பொருட்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
ரிதிமாலியத்த பொலிஸில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (10) பிற்பகல் கல்போருயாய பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கிராதுருகோட்டை பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என்றும், அவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் சிறிது காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கடந்த 7 ஆம் திகதி வீடு திரும்பியதாகவும், கல்பொறுயாய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் கஞ்சா மற்றும் ஐஸ் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் வாகரே பொலிஸில் முன்னர் பணியாற்றிய இந்த பொலிஸ் கான்ஸ்டபிள், பணியில் இருந்தபோது 2 ஐஸ் பொதிகள் மற்றும் ஒரு கஞ்சா பொதிகள் வைத்திருந்ததற்காக 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், பின்னர் 2024 ஆம் ஆண்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸில் நியமிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.