ஒரே இலக்க தகடுகளை கொண்ட கார்கள் பறிமுதல்
தெஹிவளை மற்றும் தலுகம பகுதிகளில் ஒரே இலக்க தகடுகளை கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) பாணந்துறை, வலான மத்திய ஊழல் தடுப்பு தாக்குதல் பிரிவுடன் இணைக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் இந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு வாகனம் தெஹிவளையிலும் , தலுகமவில் உள்ள முதியன்சேவத்தை பகுதிகளிலும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவ்விரண்டில் உண்மையான காரை அடையாளம் காண அரசு பகுப்பாய்வாளரால் வாகனங்களைச் சரிபார்க்க நீதிமன்ற உத்தரவு பெறப்படவுள்ளது.