தனது 5 ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்த குசல் மெண்டிஸ்
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று (14) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது 5 ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
இது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது முதல் ஒருநாள் சதமாகும்.
இலங்கை அணி தற்போது 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
களத்தில் இருக்கும் அணித்தலைவர் சரித் அசலங்கா 46 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும், இருவரும் 4 ஆவது விக்கெட்டுக்கு 92 ஓட்டங்கள் கூட்டணியைப் பேணி வருகின்றனர்.