பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷோலே அக்தர
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷோலே அக்தருக்கு ஐ.சி.சியினால் ஐந்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ரி20 உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வீராங்கனை ஒருவரிடம் பிக்சிங் செய்வது குறித்து பேஸ்புக் வழியாக பேசியுள்ளார். ஹிட் அவுட் ஆனால், குறிப்பிட்ட தொகை பணம் தருவதாக ஆசை காட்டினார்.
இதை அந்த வீராங்கனை, உடனடியாக ஐ.சி.சி யின் ஊழல் தடுப்பு குழுவிடம் தெரிவித்தார். இதுகுறித்து ஐ.சி.சி. விசாரித்தது. முடிவில், போட்டியில் பிக்சிங் செய்ய முயன்றது, இதுகுறித்த விபரங்களை தெரிவிக்க மறுத்தது போன்ற காரணங்களுக்காக கிரிக்கெட் தொடர்பான செயல்களில் ஈடுபட ஷோலேவுக்கு 5 ஆண்டு தடை விதித்தது.
ஷோலே பிக்சிங் தொடர்பாக தடை விதிக்கப்பட்ட முதல் சர்வதேச வீராங்கனை ஆனார். 36 வயதான இவர் பங்களாதேஷ் அணிக்காக இதுவரை 2 ஒருநாள், 13 சர்வதேச ரி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக 2022, ஒக்டோபரில் இலங்கைக்கு எதிரான ரி20 போட்டியில் விளையாடினார்.