மக்களவையில் புதிய வருமான வரி மசோதா
மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
கடந்த 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்களால் அந்தச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு அதிக சுமைகொண்டதாகிவிட்டதுடன் அதைப் புரிந்துகொள்வதும் கடினமாகிவிட்டது. அத்துடன் நேரடி வரி நிர்வாகத் திறனிலும் இடையூறு ஏற்பட்டது.
இவற்றைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நேற்று (13) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாநிலங்களவையிலும் இம்மசோதாவை தாக்கல் செய்யவுள்ளார் நிர்மலா சீதாராமன்.