துப்பாக்கி, ரவை, ஹெரோயினுடன் ஒருவர் கைது
உரகஸ்மன்ஹந்திய, கொட்டகிரல்ல பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போர் துப்பாக்கி, ஒரு வெளிநாட்டு ரிவோல்வர், மற்றொரு துப்பாக்கி, 10 ரவைகள் மற்றும் 2.5 கிராம் ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மஹா உரகஹா பகுதியில் வசிக்கும் 35 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.