அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சாங் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில், இந்நாட்டின் பல பொருளாதார சமூக மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பிலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சம்பந்தமாகவும், தீர்மானமிக்க பல விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.