உள்நாடு

நாடளாவிய ரீதியில் தொடரும் அரிசி சோதனை நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 இந்நிலையில் கடவத்தை, கிரிபத்கொட, மாவரமண்டிய, தெல்கொட மற்றும் வடுவேகம போன்ற பகுதிகளில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பல தொழிலதிபர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயத்திற்காக அதிக அளவு நிதியை ஒதுக்கி, விவசாய சமூகத்திற்கு அதிக கவனம் செலுத்தியதற்காக அவர்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *