பஸ் ஒன்றிலிருந்து 123 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் மீட்பு
பஸ் லக்கேஜ் பெட்டியில் ஒரு பையில் 123 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டது.
பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸின் லக்கேஜ் பெட்டியில் ஒரு பையில் இருந்த சிறிய இரும்புப் பெட்டியில் இந்த பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று (22) பிற்பகல் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ் ஒன்று பண்டாரவளை நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 123 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 113 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 09 T-56 தோட்டாக்கள் மற்றும் ஒரு LMG தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய பண்டாரவளை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.