மித்தெனிய துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது
மித்தெனிய துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (22) மாலை தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதான தெலம்புய, வெகந்தாவல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.