50 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் ஒருவர் கைது
500,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் சென்ற இலங்கைப் பிரஜை ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
இவர் கடவத்த சூரியபல்வ பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய அழகுக்கலை நிபுணராவார்.
இவர் நேற்று (22ஆம் திகதி) பிற்பகல் 3.30 மணியளவில் டுபாயிலிருந்து Fitz Air Flight 8D-824 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், அவரது பயணப் பையில் இருந்த 10,000 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 50 சிகரெட் பெட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.