IBM_friends கட்டார் அணியின் புதிய கழக சீருடை வெளியீடு!
சம்மாந்துறையின் விளையாட்டு வரலாற்றில் முக்கியமான அடையாளமாக திகழும் IBM கழகத்தின் கட்டார் அணி, இவ்வருட ஆரம்பத்தில் கட்டாரில் அறிமுகமானது.
இவ்வணியின் புதிய கழக சீருடை, இன்று (February 21) Sports City Metro Parking மைதானத்தில் நடைபெற்ற RSR அணிக்கு எதிரான நட்புறவு போட்டியில் விமர்சையாக வெளியீடு செய்யப்பட்டது.
இந்த அணியில் சம்மாந்துறையின் வீரர்கள் இணைந்து விளையாட்டின் மூலம் ஒன்றுபட்ட சகோதரத்துவத்தை வளர்த்தல், ஊக்குவித்தல், மற்றும் நாடு கடந்த நட்புறவை பேணுதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளதாக IBM அணியினர் தெரிவித்தனர்.
