கனேடிய விசா வழங்குவதில் புதிய விதிமுறைகள்
கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதைத் தடுக்கும் வகையில் விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை கனேடிய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
இந்தவகையில் கனடாவில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி கல்வி பயிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விசா நிலையை, எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரத்தை கனேடிய பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.
அதேபோல் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் கீழ், மின்னணு விசா, தற்காலிகத் தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவோ நிராகரிக்கவோ கனேடிய பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கனடாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினுடைய விசாக் காலம் நிறைவடைந்த பிறகும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறமாட்டார் என்று கனடா அதிகாரி நினைத்தால், அவர்களது விசாவினுடைய காலம் முடியும் முன்பே இரத்துச் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.