சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட ரூ.318 மில்லியன் கைப்பற்றல் – பொலிஸாா் தகவல்
நாட்டில் கடந்த 6 மாதங்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் வியாபாரத்தினால் உழைக்கப்பட்ட 318 மில்லியன் ரூபா நிதி சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது 366 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 4,796 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 790 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைபற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இன்று (25) காலை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் தெரிவித்தாா்.