10 ஆண்டுகளின் பின் மே.இ.தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய அணி 10 ஆண்டுகளின் பின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்களுக்கான அட்டவணையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணி கடைசியாக கடந்த 2015-16 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் திகதி பார்படாஸில் தொடங்குகிறது.
தென்னாபிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய பிறகு, அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.