இலங்கையின் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து
பாகிஸ்தானில் நடைபெற்வரும் 9வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் 5 விக்கெட்களினால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி பாக். மண்ணில் இலங்கை அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு முன் பாகிஸ்தான் மண்ணில் நியூசிலாந்து அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியுடன் பெற்ற வெற்றியின் பின் பாகிஸ்தான் மண்ணில் நியூசிலாந்து தொடர்ச்சியாக பெற்ற 6வது வெற்றியாக இது பதிவானது.
இதன் மூலம் பாகிஸ்தானில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த வெளிநாட்டு அணிகளின் சாதனை பட்டியலில் இலங்கையை சமன் செய்துள்ளது. இந்த சாதனையில் 7 வெற்றிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.