குஷ் ரக போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!
12 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (26) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 38 வயதுடைய இந்தியப் பெண் என்பதும் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஹாங்கொங் வழியாக இலங்கைக்கு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது பொருட்களுடன் உணவுப் பொதிகளில் 1 கிலோ 200 கிராம் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருத்ததும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.