சிறைச்சாலைகளில் விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சம்பவத்தைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் 28 சிறைச்சாலைகள் இயங்குகின்றன, அவற்றில் 10 திறந்தவெளி சிறைச்சாலைகள் ஆகும். அந்த 28 சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 29,500 ஆகும். அவர்களில் 1,200 பேர் பெண் கைதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.