சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி!
சூடானில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமினில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (25) இரவு, கிரேட்டர் கார்ட்டூமின் ஒரு பகுதியான வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி சீட்னா இராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது விமானம் விபத்துக்குள்ளானது, இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.