தொடரும் வெப்பமான காலநிலை – தடைப்படும் நீர் விநியோகம்
நாட்டில் தொடர்ந்து நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய நாட்களில் நீர் நுகர்வு அதிகரித்து, நீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அநாவசிய தேவைகளுக்கு நீர் பயன்பாட்டைக் குறைத்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
நீர் விநியோகம் தடைபட்டுள்ள பகுதிகளில் உள்ள சில நுகர்வோருக்கு பவுசர் மூலம் தண்ணீரை வழங்குவதற்கான பணிகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.