நாட்டுக்கு தொடர்ந்து கார்களை இறக்குமதி செய்த நடவடிக்கை
அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கிய மறுநாளே இரண்டாவது தொகுதி பயன்படுத்தப்பட்ட கார்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி 196 வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, தாய்லாந்திலிருந்து முதல் தொகுதி பயன்படுத்தப்பட்ட கார்கள் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன.
இதன்படி, எதிர்காலத்தில் ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷா ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.