ரயிலில் மோதி பெண் பலி!
கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயிலில் மோதி பெண் ஒருவர் இன்று (26) காலை உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கமவில் உள்ள களுவாமோதர பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய துய்யதுர சிரியாவதி நோனா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தப் பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பெலியத்த செல்லும் ரயிலில் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.