அமெரிக்காவில் தட்டம்மை பாதிப்பால் சிறுவன் பலி
அமெரிக்காவில் தட்டம்மை தடுப்பூசி செலுத்தாமலிருந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளநிலையில் தடுப்பூசி செலுத்தாமலிருந்த 15 வயது சிறுவன் ஒருவர் தட்டம்மை பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்களாகவே உள்ளனர்.
தட்டம்மை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மறுத்தமையே நோய் பரவலுக்கு காரணமென அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தட்டம்மை பாதிக்கப்பட்டவரின் இருமல் மூலம் பரவக்கூடிய இந்நோய் குழந்தைகளை எளிதாக தொற்றிக்கொள்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்குப் பின் தட்டம்மை நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.